இதில் குரு சனிப் பெயர்ச்சியை தொடர்ந்து இன்னொரு முக்கிய கிரக பெயர்ச்சியான ராகு – கேது பெயர்ச்சி 2020 செப்டம்பர் 23ம் தேதி தொடங்க போகிறது. மேலும் நிழல் கிரகங்களான ராகு கேது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ம் தேதியும் ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளது. ராகு ரிஷப ராசிக்கு செல்வதால் கேது கால சக்கரத்தில் 8வது ராசியான விருச்சிகத்திற்கு வருவதால் சில சங்கடங்கள் எல்லா ராசிக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு ராசி:

ராகு கேது பெயர்ச்சி ராகு தனுசு ராசிக்கு எட்டாம் பார்வையாக பார்ப்பார். இதனால் அவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அதனால் கேது 12 ம் இடத்தில் இருந்து ராசிக்கு விரய மோட்ச ஸ்தானத்தில் இருப்பதால் சுப செலவு இருக்க கூடும். அதே போல் ராகுவின் தொழில் சிறப்பாக்க நடக்கும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். அதுமட்டுமின்றி மனைவி வழிகளில் நல்ல பலன்கள் குடும்பத்திற்கு கிடைக்கும். அதே போல் கேது 12ல் இருப்பதால் விரய ஸ்தானம் சுப விரயங்கள் ஏற்பட்டு நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் நன்றாக நடக்கும்.

மேலும் இந்த நேரத்தில் சுப செய்திகள் உண்டாகி அது சேமிப்பாக இருக்கும் அதாவது வீடு, நிலம் , ஆடை, ஆபரணம் ஆகியவைக்கான செலவுகள் ஏற்படலாம். அதுமட்டுமின்றி பழைய வண்டியை மாற்றுவது புதிய வாகனம் வாங்குதல் போன்றவை நடக்கலாம். மேலும் நம்பர்களில் வகையில் உங்களுக்கு நல்லது நடக்கும்.

​மீன ராசி

மீன ராசிக்காரர்களுக்கு மீன ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும், 9ம் இடத்தில் கேதுவும் வர உள்ளன. இதனால் தைரியங்கள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் அமைதியாக இருக்கும். அதுமட்டுமின்றி சுப காரியங்கள் நிறைந்திருக்கும்.

மேலும் இந்த ராசியில் கேது இருக்கும் இடத்திலிருந்து 5ம் இடத்தில் மீனம் இருப்பதால் அவர்களுக்கு பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைக்கும். இதனால் சுப காரியங்கள் உண்டாகும். மேலும் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

ராகு இருக்கும் ஸ்தானத்திலிருந்து 10ம் இடத்தில் மீன ராசி இருப்பதால் மீன ராசிக்கு தொழில் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தொழில் சம்மம்தமான் முயற்சிகள் எடுப்பதால் அதில் வெற்றி உண்டாகுவதோடு நல்ல லாபமும் கிடைக்கும்.பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைப்பதால் முன்னோர்களின் ஆசி உண்டாகி மேலும் வீட்டில் மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

மேலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் மீன ராசிக்கர்ர்களுக்கும் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் மருத்துவ செலவுகள் ஏற்படும். இதனால் உடல் நலத்தில் கவனம் தேவை.

​கடக ராசி:

கடக ராசிக்கு 11ல் ராகுவும், 5ல் கேதுவும் வர உள்ளனர். மூத்த சகோதரர் லாப ஸ்தானத்தில் ராகு இருக்கின்றார். அதேமாதிரி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது உள்ளார். மூத்த சகோதரர் மற்றும் பெரியவர்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகி நல்ல லாபம் கிடைக்கும். நல்ல ஆலோசனையின் படி வீடு வாகனம் வாங்குதல் போன்றவை நடக்க கூடும். அது லாப ஸ்தானமாக அமைவதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நல்ல லாபம் கிடைக்கும்.

கேது 5ல் இருப்பதால் அவை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பதால் சிறப்பான புண்ணியங்களைப் பெறலாம். உறவினர் வழி சொந்தங்களுக்கு உங்கள் மூலம் நல்ல சுப நிகழ்ச்சிகள் நடக்கக் கூடும்.

சிம்ம ராசி:

சிம்ம ராசிக்கு நான்காம் இடத்தில் கேதுவும், 10ல் ராகுவும் அமர இருப்பதால் முன்னாடியே சனிப்பெயர்ச்சியால் சிம்ம ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்கிறது. ராகு கேது சிறப்பான பலன்களைத் தருகிறது. தொழில் ஸ்தானத்தில் ராகு அமர இருக்கிறார். ராகுவின் அனுகூலத்தை தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி விடும். அதுமட்டுமின்றி புதிய தொழில் செய்ய முயர்சிப்போர்க்கு வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

கேது 4ல் இருப்பதால் சுக ஸ்தானம் தாயார் ஸ்தானத்தில் இருந்து சிறப்பான பலன்கலை தரும். தாயாருக்கு இருந்த ஆரோக்கிய பிரச்சனைகல் குணமாகி விடும். அதுமட்டுமின்றி உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சுக ஸ்தானம் இருப்பதால் வீட்டிற்கு தேவயான ஆடம்பர பொருட்கள் எல்லாம் வாங்கக் கூடும். சுக நிகழ்ச்சிகள் ஏற்படும். இதுவரை இருந்த மன கசப்பு, மன நிம்மதி எல்லாம் நீங்கி நல்ல புத்துணர்ச்சி நன்மைகள் உண்டாகும்.