அமெரிக்காவில் தன்னை விட 32 வயது அதிகம் கொண்ட நபரை திருமணம் செய்த பெண், 17-ஆம் ஆண்டின் திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைப்பதில், தங்களின் திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த தம்பதி Carrie(44)-Alan(76). இவர்கள் இருவரும் 22 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்து, அதன் பின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

 

இவர்கள் தற்போது தங்களின் 17-ஆம் ஆண்டு திருமண வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கின்றனர்.

இவ்வளவு அதிக வயது இடைவெளி இருந்தும், 17 ஆண்டுகள் எப்படி ஒன்றாக வாழ முடிந்தது? என்பது குறித்து இந்த தம்பதியினர் கூறியுள்ளனர்.

 

இவர்கள் இருவரும் சந்தித்து கொண்ட போது, Carrie 23 வயதாக இருந்தார். Alan-னின் வாடிக்கையாளருக்காக Carrie வேலை செய்து வந்ததால், இருவரும் அது குறித்து தொடர்ந்து தொலைப் பேசியில் பேசி வந்துள்ளனர்.

இதுவே இருவருக்கும் ஒரு வித புரிதலை கொடுத்துள்ளது.

Alan வயதானவர் என்பது தெரியும், இருப்பினும் அவர் தொலைப்பேசியில் பேசும் போது, அந்தளவிற்கு அன்பாக பேசுவார். இதனாலே அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருந்தது.

அப்படி ஒரு சூழ்நிலையில் தான், Carrie-ஐ Alan மதிய உணவிற்கு ஒரு முறை அழைத்துள்ளார். அப்போது இருவரும் மணிக்கணக்கில் பேசியுள்ளனர்.

1998-ல் சந்தித்து கொண்ட இந்த ஜோடி, அதன் பின் 2003-ஆம் ஆண்டு திருமணம் செய்ய முடிவு செய்தனர். Alan-க்கு முதல் திருமணம் காரணமாக இரண்டு மகள்கள் உள்ளனர்.

அவர்கள் இருவருமே Carrie-ஐ விட அதிக வயதானவர்கள்.

 

Carrie தன்னுடைய காதல் குறித்து அவர் அம்மாவிடம் கூறிய போது பயந்துள்ளார். ஏனெனில் Alan இவரை தேவைக்கு பயன்படுத்திவிட்டு சென்றுவிடலாம் என்று கவலைப்பட்டுள்ளார்.

இருப்பினும், அவரின் மற்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பெரும்பாலோர் Alan-ஐ ஏற்றுக்கொண்டனர்.

Carrie நாங்கள் ஒரு முறை ஐரோப்பிய சுற்றுப் பயணத்தின் போது, பேருந்தில் எங்கள் முன்னால் அமர்ந்திருந்த ஆண்கள் இரண்டு பேர், திரும்பி பார்த்து, தன்னை Alan-ன் மனைவியா அல்லது காதலியா என்று கேட்டனர்.

அப்போது நான் அவள் மனைவி என்று சொன்ன போது அவர்கள் அதிர்ச்சியடைந்ததாக கூறினார்.

 

மேலும், ஐரோப்பாவிற்கான மற்றொரு பயணத்தின் போது, பயணத்தில் இருந்த இரண்டு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண், தன்னை அவரின் மகள் என்று நினைத்து, இரண்டு உணவிற்கு எங்களுடன் சேர்ந்து சாப்பிட விரும்புகிறீர்களா என்று கேட்டனர்.

நான் அவருடைய மனைவி என்றவுடன், அவர்கள் உடனே இந்த விஷயத்தை மறந்துவிடும் படி(கேட்ட விஷயத்தை) சொல்லி வெளியேறினர்.

 

நாங்கள் இது போன்று எதிர்மறையான எதிவிளைவுகளை பெறுவோம் என்ற பயத்தின் காரணமாக, பொது இடத்தில் நாங்கள் கட்டிப்பிடிப்பதில்லை, முத்தமிடுவதில்லை, கைகளை பிடித்துகொள்வதில்லை.

ஒரு வயது இடைவெளி உள்ள உறவு பல நன்மைகளை கொடுக்கும் என்று Carrie கூறினார். ஒருவருக்கு ஒருவர் நேசிக்கிறோம், எந்த பிரச்சனை வந்தாலும், இருவரும் சேர்ந்து செயல்பட விரும்புகிறோம்.

வயதான துணையின் முதிர்ச்சி இளையவருக்கு ஸ்திரத்தன்மையையும் உறுதியையும் அளிக்கிறது என்று தெரிவித்தார்.

 

தற்போது இருக்கும் காலத்தில் திருமணம் ஆன சில ஆண்டுகளிலே விவாகரத்து என்று நீதிமன்றத்தில் போய் நிற்கும் பலருக்கு முன்னால், இந்த தம்பதி 17 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர் என்பது ஆச்சரியமாக இருந்தாலும், அவர்களின் அன்பு, பொறுமையே, விட்டுக் கொடுத்து போவதே காரணம் என்று கூறுகின்றனர்.