சிறிது நேரம் கரண்ட் இல்லையென்றால் நம்மால் இருக்க முடியாது. ஆனால் புதுக்கோட்டை அருகே ஒரு சிறு பறவை குஞ்சு பொறிப்பதற்காக மொத்த கிராமமும் தெரு விளக்குகள் இன்றி இருட்டில் இருந்த சம்பவம் தேசிய அளவில் அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.
பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளை காப்பதன் அவசியம் குறித்து பலரும் பேசி வரும் நிலையில் அதை செயல்பாட்டில் காட்டியுள்ளது ஒரு தமிழக கிராமம். புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள சிறு கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் கறுப்பு ராஜா.
அந்த கிராமத்தில் உள்ள தெரு விளக்குகள் அனைத்திற்குமான மெயின் ஸ்விட்ச் போர்டு அவர் வீட்டின் அருகே உள்ளது. தினமும் மாலை அதை ஆன் செய்வதையும், விடியற்காலையில் அதை ஆஃப் செய்வதையும் ஒரு வழக்கமான சேவையாக செய்து வந்துள்ளார் கறுப்பு ராஜா.

கிராம மக்களை நேரில் சந்தித்த மாவட்ட வன ஆய்வாளர், கிராம மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த நீல நிற பறவை இந்தியா, பாகிஸ்தான், பூடான் போன்ற பகுதிகளில் மட்டுமே காணப்படும் நீலநிற இந்திய ராபின் பறவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
