சாமி படங்களில் அம்மனாகவும், படைப்பா நீலாம்பரியாகவும், பாகுபலி சிவகாசியாகவும் பல பரிமாணங்களை எடுக்க ரம்யா கிருஷ்ணனால் மட்டுமே முடியும்.

49 வயதிலும் குறையாத அழகு மற்றும் இளமையுடன் வலம் வரும் ரம்யா கிருஷ்ணன் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், புடவையில் செம்ம கெத்தாக கொடுத்துள்ள போஸ்கள் தாறுமாறு வைரலாகி வருகிறது.

‘பாகுபலி’ திரைப்படம் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

இந்தியில் ‘கல்நாயக்’, ‘க்ரிமினல்’, ‘ஷபத்’, ‘படே மியான் சோடே மியான்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருத்துள்ளார். 14 வயசில் வெள்ளை மனசு என்ற படம் மூலம் ஓய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக அறிமுகமான ரம்யா கிருஷ்ணனுக்கு தற்போது 49 வயதானாலும், அழகும், இளமையும் குறையவில்லை.

அம்மன் கெட்டப்பில் எந்த அளவிற்கு வெளுத்து வாங்குகிறாரோ? அதே அளவிற்கு கவர்ச்சியிலும் பின்னி பெடலெடுத்துவிடுவார். அப்படி சிம்புவுடன் போட்டுத்தாக்கு பாட்டிக்கு ரம்யா கிருஷ்ணன் போட்ட குத்தாட்டத்தை யாரும் மறத்திருக்க முடியாது.

அந்த ஒரே பாட்டில் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர வைத்தார்.நரசிம்மா படத்தில் ஒரு குத்து பாட்டுக்கு கவர்ச்சியாக ஆடிய நடிகை ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்ரன், தேவயானி நடித்த பஞ்சதந்திரம் படத்திலும் வைராஜா வை… உன் வலது கையை வை பாடலுக்கு கிளாமரில் பட்டையைக் கிளப்பியிருப்பார்.

காலங்கள் கடந்தாலும் இவருக்கு என தனி மார்கெட் இருக்கிறது. இவருக்கு கவர்ச்சி வேடமோ, கடவுள் வேடமோ கண கச்சிதமாக பொருந்தும்.பொதுவாக நடிகையாக இருந்தால் ஒன்னு குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் அல்லது கவர்ச்சியில் காட்டு காட்டு என காட்டுவார்கள்.

ஆனால், ரம்யாகிருஷ்ணன் இரண்டிலையும் பலே கில்லாடி.35 வயதில் மார்கெட் இல்லாமல் காணாமல் போகும் நடிகைக்கு மத்தியில் 49 வயதிலேயும் இன்னும் கவர்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார் ரம்யாகிருஷ்ணன்.

49 வயதுக்கு மேலாகியும் எப்படி இவர் மட்டும் இன்னும் இளமையாக இருக்கிறார் என பல நடிகைகள் மண்டையை பிய்த்துக் கொண்டு இருக்கின்றன. தற்போது முன்னழகை புகைப்படம் பிடித்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

error: Content is protected !!