பிரிட்டனில் வசிக்கும் 50 வயது பெண் ஒருவர் ம துபா ன கடைக்கு சென்று ம து கேட்டபோது அடையாள அட்டை கேட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் கவுண்டரி பகுதியில், வசிக்கும் ராஜன் கில்(50) என்ற பெண் இளம் வயது தோற்றம் உடையரவாக இருப்பதால், மதுபானம் வாங்க செல்லும்போதெல்லாம் ம துபா னம் வாங்குவதற்கான வயது தகுதி உடையவரா என்பதை உறுதி செய்வதற்காக கடைக்காரர்கள் அவரிடம் அடையாள அட்டை கேட்பது வழக்கம்.

ஆனால், உண்மையில் ராஜன் கில்லுக்கு 25 வயதில் நீலம் என்கிற மகள், 19 வயதில் ஜாஸ்மின் என்கிற மகள் என தோளுக்கு மேல் வளர்ந்த 2 மகள்கள் இருக்கிறார்கள். எனினும் ராஜன் கில், தன் மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை பார்த்தால் அவர் தனது மகள்களுக்கு சகோதரி போல் இருப்பதாகவும் பலர் கூறியுள்ளனர்.

இதனாலேயே, தானே எப்போது கடைக்கு சென்றாலும் தன்னிடம் கடைக்காரர்கள் அடையாள அட்டை கேட்பதால் அடையாள அட்டையையும் உடன் கொண்டு செல்வதாக குறிப்பிடுகிறார் ராஜன் கில்.

ராஜன் கில்லின் கணவர் ஹர்ப்ரீத், ராஜன் கில்லை விட பத்து வயது இளையவர். ஆனால் புகைப்படத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லை. பலரும் தன் மகள்களிடம், “இது உங்கள் அக்காவா?” என்று கேட்டு கேலி செய்வதாகவும், ஆனால் தான் அதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்வதாகவும், இத்தனைக்கும் எந்த வித செயற்கை அறுவை சிகிச்சையும் உடலில் செய்து கொள்ளவில்லை என்றும் ராஜன் கில் தெரிவித்துள்ளார்.