அம்மாவுக்கு வீசிய வலையில் சிக்கிய பொண்ணு..!! உளறி கொட்டிய ஆர்யா..!! சேட்டை கொஞ்சம் அதிகம்தான் அதுக்காக இப்படியா..?? கலாய்க்கும் நெட்டிசென்கள்…!!!

Cinema News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் ஆர்யா மற்றும் விஷால். இவர்கள் எப்படிப்பட்ட நண்பர்கள் என்பதை நாம் அறிந்த ஒன்று தான். கடைசி வரையிலும் சிங்கிளாக வாழ்வோம் என்ற குறிக்கோளோடு வாழ்ந்து வந்தார்கள்.

இந்நிலையில் திடீரென்று ஆர்யா தன்னைவிட 15 வயது குறைவான இளம் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆர்யா சாயிஷா உடன் இணைந்து கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ஆர்யாவிற்கு சாயிஷாவின் மீது ஒரு கண்ணாம்.

இதற்கு முன்பு ஆர்யா கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோவில் தனக்கான பெண்ணை தேர்ந்தெடுப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென்று என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது யோசித்து கூறுகிறேன் என்று கழண்டு விட்டார்.

இவர் சிறிது காலம் கழித்து முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இது பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. பிறகு கடைசியில் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோ கலர்ஸ் தமிழில் டிஆர்பிகாக எடுக்கப்பட்ட செட்அப் என்று பிறகு தெரிந்தது.

arya-sayeesha

இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஒரு பேட்டியில் ஆர்யா எப்படி சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார் என்ற சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் முதலில் ஆர்யா சாயிஷாவை காதலிப்பதை நேரடியாக அவரின் அம்மாவை சந்தித்து என்னால் சாயிஷா இல்லாமல் இருக்க முடியாது என்றும் அவரை நன்றாக பார்த்துக் கொள்கிறேன். சத்தியமா நல்லா பாத்துக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சாயிஷாவின் அம்மாவை எங்கு பார்த்தாலும் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து தடவையாவது ஐ லவ் யூ என்று கூறி விடுவாராம். இதன்மூலம் சாயிஷாவின் அம்மாவிற்கு ஆர்யாவை பிடித்துவிட்டதாம் பிறகு சாயிஷாவிடம் அவருடைய அம்மா திருமணம் செய்து கொள்ள சம்மதம் வாங்கினாராம்.