ஐஸ்வர்யா ராயை தி ரு ட ஆசைப்பட்ட அந்த ரொமான்டிக் நடிகர் இவர்தானா..?? திருமணமானாலும் பரவாயில்லை தீராத காதலாம்..!!!

Cinema News

உலக அழகி ஐஸ்வர்யா ராய் பற்றி எல்லோருமே அறிந்ததுதான். அழகின் சிற்பமாக வலம் வந்தவர் தென்னிந்திய சினிமா முதல் ஹிந்தி சினிமா வரை அனைத்து மொழிகளிலும் மிகவும் பிரபலமான நடிகை.

சினிமா கேரியர் நன்றாக சென்று கொண்டிருந்த போதும் பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து தற்போது அவருக்கு ஒரு குழந்தையும்  உள்ளது. குழந்தை பிறந்த பிறகு நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் சினிமா பயணத்தை தொடங்கினர்.

திருமணத்திற்கு பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மாட்டார் என நினைத்திருந்தவர்களை அதிர்ச்சி அடையும் வகையில்  பிரபல நடிகருடன் இணைந்து முத்தக்காட்சி, படுக்கை அறை காட்சி போன்றவற்றில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஐஸ்வர்யா ராயை பிடிக்காத நச்சத்திரம் உண்டா. அந்த வகையில் ஹிந்தி சினிமாவில் ரொமான்டிக் நாயகனாக வலம் வரும் இம்ரான் ஹஸ்மி என்ற நடிகர் ஐஸ்வர்யா ராய் மீது ஏகப்பட்ட காதல் கொண்டிருந்தாராம். எப்படியாவது ஐஸ்வர்யாராயை காதல் வலையில் வீழ்த்திவிட வேண்டுமென பல்வேறு முயற்சிகளில் இறங்கினாராம்.

அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்கு பிறகும் அவரது காதல் ஆசை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல் சமீபத்திய பேட்டி ஒன்றில், அபிஷேக் பச்சனிடமிருந்து எதை திருட ஆசைப்படுகிறீர்கள்? என தொகுப்பாளர் கேட்டதற்கு, ஐஸ்வர்யா ராயை தான் என பதிலளித்துள்ளார. இதிலிருந்தே ஐஸ்வர்யாராய் மீது அவருக்கு எவ்வளவு காதல்  இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.