தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் – காதல் கைகூடும் நேரத்தில் கழட்டி விட்டு சென்ற நடிகை ஸ்னேகா..!! பாவம் முன்னாள் காதலர்…!!!

Cinema News

நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்களிடையே புன்னகை அரசி என்ற பட்டத்துடன் நீண்ட நாட்களாக வலம் வருபவர். ஆனால் தற்போது வரை தமிழ் சினிமாவில் இளம் நாயகிகள் வரவால் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் காணாமல் போய்விடுவார் போல.

ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் அனைத்திலுமே இரண்டாம்கட்ட நடிகையாகவே வலம் வந்தார். அவரும் முன்னணி நடிகையாக வலம் வர பல முயற்சிகள் செய்து விட்டார். இல்லை என்றால் மார்க்கெட் இல்லாத நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

கால கட்டத்தில்  கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். அப்படிப்பட்ட சினேகா தன்னுடைய வாழ்க்கையில் ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலித்ததாக அப்போதே பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி சினிமா உலகில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அந்த வகையில் ஆரம்ப காலத்தில் அருமையான ஜோடி என்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர்கள் தான் ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா. இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து கனிய தொடங்கியது.

அதே நேரத்தில் மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரையும் காதலித்து வந்ததாகக் செய்தி வந்தது. ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்தை கழட்டி விட்டுவிட்டு அந்த தொழிலதிபருடன் அவருக்கு நிச்சயம் நடந்ததாகவும் ஒரு ஒரு தகவல் பரவியது.

இறுதியாக இரண்டும் இல்லாமல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் முடித்தார். என்னதான் முன்னணி நடிகைகள் பெரிய அளவு ரகசியங்களை மறைத்தாலும் அது எப்படியாவது ஒரு வகையில் கசிந்துவிடுவது வழக்கம்.

இது புரியாமல் சினேகா செய்துவந்த காதல் வேலை வெளியாகி அவரது கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டதாம். இதனால்தான் அவசர அவசரமாக பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டதாகவும் சினிமா வட்டங்களில் கிசுகிசுக்கப்பட்டது.