அந்த காலத்து LADY SUPERSTAR கே.ஆர்.விஜயாவுக்கு இத்தனை சொத்துக்கள் இருந்ததா..?? உணமையாவே ராணி மாதிரிதான் வாழ்ந்திருக்காங்க போல…!!!

Cinema News Tamil News

ஹீரோக்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த சினிமா உலகில் அவ்வப்போது இந்த மாதிரி நடிகைகளுக்கு ஏதாவது அதிர்ஷ்டம் போல சொகுசு வாழ்க்கை அமைந்துவிடுகிறது.

சினிமா உலகில் எப்போதுமே ஆண் நடிகர்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அது சொத்து விஷயமாக இருந்தாலும் சரி, சம்பள விஷயமாக இருந்தாலும் சரி, இவ்வளவு ஏன் புகழ் விஷயத்திலும் ஆண்கள் தான் எப்போதுமே முதலிடம்.

அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் சொந்தமாக கப்பல், விமானம், சொகுசு பங்களா என சொகுசாக வாழ்ந்த நடிகை பற்றி யாருக்காவது தெரியுமா? இந்த காலகட்டங்களில் நடிகைகள் ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதால் சொகுசு வாழ்க்கை சாத்தியம்.

ஆனால் அப்போதெல்லாம் அவ்வளவு சம்பளம் கிடையாது. அப்படி அந்த காலகட்டங்களிலேயே சொகுசு ராணியாக வாழ்ந்தவர்தான் கே ஆர் விஜயா. இந்த காலத்தில் நயன்தாரா எப்படியோ அப்படித்தான் அந்த காலத்தில் கே ஆர் விஜயா.

முன்னணி நடிகர்கள், இளம் நடிகர்கள் என்று பார்க்காமல் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்தால் நடித்துக் கொடுக்க அவர் தயங்கியதில்லை. அப்படி தன்னுடைய சம்பாத்தியத்தில் சொந்தமாக கப்பல், விமானம், சொகுசு பங்களா என வாங்கி சினிமாவில் மட்டும் அல்லாமல் நிஜத்திலும் ராணி போல தன அவரது வாழ்கையும் இருந்ததாம்.

தற்போது கப்பல் விமானம் எதுவும் இல்லை என்றாலும் இப்போதும் சொகுசாக மகாராணி போலத்தான் வாழ்கிறார். அப்படி கே ஆர் விஜயாவுக்கு பிறகு அந்த அளவுக்கு சொகுசாக வாழ்ந்து வருபவர் என்றால் அது நம்ம லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான்.