“குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று” – பிறந்த நாள் பணத்தை வைத்து சிறுமி செய்த செயலால் நெகிழ்ந்த கனிமொழி…!!!

Tamil News

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் தமிழகத்திலும் இதன் தாக்கம் கூடுதலாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா நிவாரணத்திற்கு நன்கொடை வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்த நிலையில், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பினரும் முதல்வரை சந்தித்து நிதியுதவியை தங்களால் முடிந்த நிதி உதவியை அளித்து வருகிறாரகள்.

தற்போது பள்ளிக் குழந்தைகளும் தங்களால் முடிந்த நிதியுதவி கொடுத்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 3ம் வகுப்பு மாணவி வருண்யா தேவி ரூ.2000 ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

தனது பிறந்தநாள் செலவிற்கு சேர்த்து வைத்த தொகையினை, திமுக மகளிரணி தலைவர் கனிமொழியிடம் வழங்கியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி தூத்துக்குடி சிறுமி வருண்யா தேவி தன் பிறந்த நாள் செலவிற்காக சேமித்து வைத்திருந்த ரூ2000ஐ என்னிடம் அளித்தது என்னை நெகிழ வைத்தது.

இளம் வயதிலேயே ஈகை குணம் கொண்ட சிறார்கள் கொண்ட தமிழகம் இப்பேரிடர் காலத்தை கடந்து புதுமுனைப்போடு வெற்றி நடை போடும் என்ற நம்பிக்கையினை எனக்கு அளித்தது என்று பதிவிட்டுருந்தார்.