பார்க்க பச்சக்குழந்தை மாதிரி, ஆனா இப்படியெல்லாம் போஸ் ஆ …? நீச்சல் உடையில் ஷாக் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்…!!!

Cinema News

சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். “காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர கலர் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அளவான அழகில் தமிழில் சினிமாவில் கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகிறார்.

வேர்ல்டு பேமஸ் லவ்வர் மற்றும் டக் ஜெகதீஷ் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இனி அதுபோன்ற கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை எனவும் கதையின் நாயகியாக மட்டுமே நடிப்பது என்றும் முடிவெடுத்துள்ளாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சினிமா, ஷூட்டிங் என பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் தன்னை பின் தொடரும் ரசிகர்களையும் குஷிப்படுத்த தவறுவதில்லை

தற்போது, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எட்டு படங்கள் லை ன் அ ப் பில் இருக்கிறது. இந்நிலையில், தற்போது நீச்சல் உடையில் முழு தொடையும் தெரிய எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.