Connect with us

கட்டுனா இவள கட்டனும் டா !! மொரட்டுக்கட்டை நீங்க சொக்கிபோனோம் நாங்க !! ஆண்ட்ரியா-வை பார்த்து சொக்கி கிடக்கும் ரசிகர்கள் !!

Actress Gallery

கட்டுனா இவள கட்டனும் டா !! மொரட்டுக்கட்டை நீங்க சொக்கிபோனோம் நாங்க !! ஆண்ட்ரியா-வை பார்த்து சொக்கி கிடக்கும் ரசிகர்கள் !!

ஆண்ட்ரியா,(Andrea) தமிழ் சினிமாவில் நல்ல நடிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. இவர் நடிகை மட்டுமல்ல, நல்ல பின்னணி பாடகி. பல முக்கிய படங்களில், கதாநாயகிகளுக்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார்.

அதாவது, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும், தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், அரண்மனை, அரண்மனை 2, வடசென்னை, மங்காத்தா, துப்பறிவாளன், தரமணி, மாஸ்டர், உள்ளிட்ட படங்களில் ஆண்ட்ரியா நடித்திருக்கிறார்.

இதில், துப்பறிவாளன் படத்தி்ல், விஷாலுடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் வில்லி கேரக்டரில், ஆண்ட்ரியா வெளுத்து வாங்கி இருந்தார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில், நோய்வாய்பட்ட குழந்தையின் அன்பு தாயாக, கணவர் சரத்குமாரின் அன்புக்கு ஏங்கும் மனைவியாக, நல்ல நடிப்பை தந்திருப்பார்.

ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை உள்ளிட்ட படங்களிலும் ஆண்ட்ரியா, வித்யாசமான ஒரு கதைக்களத்தில், நல்ல நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

சென்னை, அரக்கோணத்தை சேர்ந்த ஆண்ட்ரியா, ஆங்கிலோ – இந்திய குடும்பத்தில் பிறந்தவர். 10 வயதில் இருந்தே, குழு பாடகியாக, பல நிகழ்ச்சிகளில் பாடி இருக்கிறார், கல்லூரி மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.

பல பாடல்களை, சினிமாவில் பாடி இருக்கிறார். ஆடுகளம் படத்தில் டாப்சிக்கும், வேட்டையாடு விளையாடு படத்தில், கமாலினி முகர்ஜிக்கும், நண்பன் படத்தில், இலியானாவுக்கும், படத்தில் அவர்களது குரலாக பின்னணியில் ஒலித்தது ஆண்ட்ரியாவின் குரல்தான்.

கண்ணும் கண்ணும் நோக்கியா (அந்நியன்), கற்க கற்க( வேட்டையாடு விளையாடு), தீராத விளையாட்டுப் பிள்ளை (தீராத விளையாட்டு பிள்ளை), இதுவரை (கோவா), பூக்கள் பூக்கள் தருணம்( மதராச பட்டணம்), ஹூ இஸ் த ஹீரோ (மன்மதன் அம்பு), நோ மணி நோ ஹனி (வானம்) என பல பாடல்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

நடிகை, பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முக தன்மை கொண்ட ஆண்ட்ரியா, அவ்வப்போது, சோஷியல் மீடியாவில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து, ரசிகர்களை அசத்துகிறார். சினிமாவில் மாடர்ன் உடையில் அசத்துவதைப் போலவே, நிஜத்திலும் அவருக்கு மாடர்ன் உடை அதிகம் பிடித்திருப்பதால், ஸ்டைலிஷ் ஆன டிரஸ்களில், அடிக்கடி தனது அழகிய புகைப்படங்களை, கிளாமர் ததும்பும் படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை கிறங்கடிக்கிறார்.

ஆனால், இந்த முறை, அதற்கு மாறாக ரோஸ் நிற நைஸ் புடவையில் ஆண்ட்ரியா ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோற்றமளிக்கிறார். ஜவுளிக்கடை விளம்பர மாடல் போல, புடவையில் ஆண்ட்ரியா தரும் போஸ்களை பார்த்து, ரசிகர்கள் அசந்து போய் இருக்கின்றனர்.

வழக்கமாக மாடர்ன் டிரஸ்சில் ஆண்ட்ரியாவை பார்த்து ரசித்து பழகிய ரசிகர்களின் கண்களுக்கு, புடவையில் அவரை பார்ப்பதே ஆச்சரியத்தை தந்திருக்கிறது. என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லையே என ஒரு தரப்பும் ரசிகர்களும், கட்டுனா ஆண்ட்ரியாவை கட்டணும்டா, என்ன பிகரு? என்ன ஸ்டைலு? என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top