ஷைலாஜா பிரியா, ஒரு தெலுங்கு நடிகை. அவர் முதன்மையாக தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சோப் விளம்பரக்களில் தோன்றினார், மேலும் இந்தி மற்றும் தமிழ் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த அழகு திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிப்பதன் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார்.

அவர் 1997 முதல் தொழில்துறையில் இருந்து வருகிறார், மேலும் 80 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான சீரியல்களில் நடித்து தள்ளியுள்ளார். மேலும் “ஹீரோ வெங்கடேஷ் பாபு பங்கரம்” படத்தில் ரவுடி மனைவியாக ஜோடி போட்டிருந்தார்.

சோப் விளம்பரங்களை தவிர, தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 60 திரைப்படங்களில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், வெங்கடேஷ், நாகார்ஜுனா மற்றும் அமிதாப் பச்சன் போன்ற பல்வேறு நடிகர்களுடன் துணை நடிகையாக தோன்றியிருந்தார்.

தமிழில் “வாணி ராணி”, “பிரியாத வரம் வேண்டும்”,”சாக்லேட்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் இவர் தற்போது டீசர்ட், பேண்ட் அணிந்து கொண்டு வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “வாவ்.. இந்த வயசுலயும் இப்படியா ? உங்களுக்கு வயசே ஆகல” என குஷியா திறந்த வாய் மூடாமல் பார்த்து ரசிக்கிறார்கள்.

By sakthi