பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அபிராமி வெங்கடாச்சலம் என்பதும் இவர் அந்த நிகழ்ச்சியில் முதலில் கவினை காதலித்து அதன்பின் டைட்டில் வின்னர் முகினை காதலித்ததாகவும் கூறப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரையுலகில் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த அபிராமிக்கு மற்ற போட்டியாளர்களை போல் அவருக்கும் எந்த வாய்ப்பும் கிட்டவில்லை.

அபிராமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அஜித்துடன் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ரிலீஸாகி நல்ல வெற்றி பெற்ற போதிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவ்வப்போது சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் அபிராமி வெங்கடாச்சலம், சமீபத்தில் த்ரோபேக் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பதின்ம வயதில் பருவ மொட்டாக இருந்த போது எடுத்த புகைப்படங்கள் இவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். குட்டியான ட்ரவுசர்.. அதை விட குட்டியான ப்ரா என கவர்ச்சி புயலாக இருக்கும் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

By sakthi