பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோ னா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சற்று மோச மடைந்திருந்தது.

அவர் விரைவில் மீண்டு வர வேண்டி, சினிமா பிரபலங்கள் உட்பட இசை ரசிகர்கள் பலர் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில், தற்போது வெளியான தகவலின் படி அவருக்கு கொ ரோனா தொ ற்று நெகடிவ் என முடிவுகள் வந்துள்ளதாக காலையில், சினிமா மக்கள் தொடர்பாளர் நிகலின் ட்விட்டர் பதிவு ஒன்று தீயாய் பரவி வந்தது.

இந்த நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.பி.பி சரண், “எப்போதும் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னர், தந்தையின் உடல்நலம் பற்றி வீடியோ விடுவேன்.

ஆனால், இன்று காலை எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகடிவ் வந்துவிட்டதாக தகவல்கள் பரவின. நெகடிவ் அல்லது பாசிடிவ் என்பதல்ல விஷயம்.

அவர் தற்போதும் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடனே சுவாசித்து வருகிறார். அவரின் உடல்நலம் பற்றிய தகவல் எனக்கே முதலில் வரும்.

ஆகவே, தவ றான செய்திகளை வெளியிடுபவர்களிடம் கவனமாக இருங்கள்” என்று கூறியுள்ளார். எனினும், எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகடிவ் என்ற தகவல் உண்மையா என்றும் சரண் விளக்கமாக தெரிவிக்கவில்லை.

By Margus