இவரை ஆரம்பகாலத்தில் சின்னத்திரை “நீலாம்பரி” என்றும் அழைக்கப்பட்டார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “சக்தி” தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். இவர் போலீசாக வேண்டும் என்பது தான் கனவாக வைத்திருந்தார். அதற்கு பலனாக பாரதிராஜா இயக்கத்தில் சீரியல் ஒன்றில் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து அனைத்து ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் இவர் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார்.அந்த வகையில் “சீமராஜா” திரைப்படத்தில் “சிம்ரனுக்கும்”, புதுப்பேட்டை படத்தில் “சினேகாவுக்கும்”, தாமிரபரணி படத்தில் நடிகை “நதியாவிற்கும்” டப்பிங் கொடுத்து பிரபலமானார்.

தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கணீர் குரலும் தான். இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு நானும் நடிகை வரிசையில் இருக்கிறேன் என்று நினைவு படுத்திக் கொண்டிருந்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இவரது சில வீடியோக்கள் ரசிகர்களால் அதிகம் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.