இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற சீரியலில் கதாநாயகன் மாயனின் தங்கையாக நடித்திருந்தார். தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த “தென்றல்” என்ற சீரியலில் நடித்தார். அதன் பிறகு பல சீரியல்களில் வில்லியாகவே தோன்றியுள்ளார். அந்த வகையில் பிரியசகி, மெல்லதிறந்ததுகதவு, அழகி, களத்து வீடு, மோகினி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். நடனத்தின் மீது கொண்டிருந்த தீராத காதல் காரணமாக நடன இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.

சீரியலில் வில்லியாக வந்து மிரட்டினாலும் இணையத்தில் “கிளாமர் குயினாகவும்” “மாடர்ன் மயிலாகவும்” வந்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கிறார். தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக வலம் வரும் இவரின் சில போட்டோ ஷூட் வீடியோக்கள் இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.