80s காலத்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தவர் தான்  இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்த பொழுது பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் நிரந்தரமாக பிடித்துவிட்டார். அதற்கு காரணம் இவர் திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பை காட்டி மக்களை கவர்ந்து விடுகிறார். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் குஷ்பூ சின்னத்திரையிலும் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார். அவ்வாறு இவர் பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லட்சுமி ஸ்டோர்ஸ்” சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார். இந்த சீரியல் மக்களிடையே பேராதரவைப் பெற்று நன்றாக மக்களிடையே ஒளிபரப்பாகி முடிந்தது.

அது மட்டுமல்லாமல் அரசியலிலும் பயணித்து வருகிறார். திரைப்படங்கள் தயாரிப்பது, திரைப்படங்களில் நடிப்பது மற்றும் அரசியல் என எல்லாவற்றிலும் பிஸியாக இருக்கும் இவர் சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து  இத்தனை நாட்களாக தன்னால் அணிய முடியவில்லையே என்று ஏங்கிய அனைத்து ஆடைகளையும் தேர்வு செய்து தற்போது அணிந்து மகிழ்ந்து வருகிறார். இதனிடையே இவரது பழைய சில வீடியோக்கள் இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.