கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் இவர் தான் அறிமுகமான முதல் திரைப்படமான “ஐயா” திரைப்படத்திலிருந்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை சேகரித்துக் கொண்டார்.
இவர் சமீபத்தில் தான் 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். மேலும், தங்களுடைய திருமண வைபவத்தை பிரபல OTT தளமான நெட்ஃபிளிக்ஸில் 25 கோடி ரூபாய்க்கு விற்றனர். நடிகை நயன்தாரா சினிமாவில் இருந்து முற்றாக விலகுவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ள படங்களில் நடித்து முடித்து விட்டு அதன் பிறகு படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்பிறகு படங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு திரைத்துறையில் தன்னுடைய பங்களிப்பை கொடுப்பார் என்று கூறுகிறார்கள். அந்த வகையில் தற்போது இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அங்கிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.