சென்னையை பூர்விகமாக கொண்டவர் பாவனா, இவரின் முழுப்பெயர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் தமிழகத்தின் பல முன்னணி தொலைகாட்சிகளில் வரும் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியவர் ஆவார், நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமின்றி வர்ணனையாளர், பின்னணிப் பாடகர், நடன கலைஞர், காணொளி தொகுப்பாளினி, வானொலி தொகுப்பாளினி என பல முகங்கள் இவருக்கு உண்டு. 1982 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர், இந்திய தொலைக்காட்சிகளில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகவும் இருந்து வருகிறார்.
விந்து தானம்
இவர், நடிகர் ஹிருத்திக் ரோஷன் விந்தணு தானம் செய்ய வேண்டும் என்று கூறி பரபரப்ப்பு ஏற்படுத்தினார்.
அவர் நடிப்பில் வெளியான வார் படம் பற்றி விமர்சனம் செய்திருக்கும் பாவனா பாலகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் பரபரப்பும், குசும்பும கலந்த மெசேஜ் ஒன்றை வெளியிட்டார்.

அதில், ’வார் படத்தை பார்க்கும் ஆண்கள் அதில் இடம்பெற்றிருக்கும் ஆக்ஷன் காட்சி, கார் சேசிங் மற்றும் ஹாலிவுட் படத்துக்க இணையான சண்டை காட்சிகளுக்காக படத்தை ரசிப்பார்கள்.
இப்படம் பெண்களுக்கு பிடிக்க இரண்டு காரணங்கள் உள்ளது. அதில் நடித்திருக்கும் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராப். இருவரும் அவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறார்கள்.

ஹிருத்திக் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். அவர் தனது விந்தணுவை தானம் செய்ய முன்வர வேண்டும்’ என கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.
இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ஹிர்திக் ரோஷனிடம் கேள்வி எழுப்பிய போது, ” வேற எதாவது உருப்படியான கேள்வியை கேளுங்கள்” என்று சிரித்தபடியே நெத்தியடி கூறியுள்ளார்.

அவரது பதிவை ரசிகர்கள் பலரும் கேலி, கிண்டல் செய்தனர். ஹிருத்திக் ரோஷனை விந்து தானம் செய்ய சொல்வதன் மர்மம் என்ன..? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
அந்த சமயத்தில் இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆனது. டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமாக பணியாற்றுபவர் பாவனா.
