37 வயதிலும் இளமை ஹீரோயின் போல இருக்கும் இவர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மற்றும் கிரிக்கெட் நிகழ்ச்சிகளுக்கு வர்ணனையாளராக பணியாற்றுவது என தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றார். தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல் கடந்த 2011 ஆம் ஆண்டு “வீராதி வீரர்” என்ற பாடலை பாடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தன்னை ஒரு பாடகியாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இவருடைய அழகான தமிழ் உச்சரிப்பு மற்றும் ஆங்கிலம் ஆங்கில புலமை இரண்டும் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று இந்தியா முழுமைக்குமான பிரபலாமான தொகுப்பாளினியாக மாற்றி உள்ளது என்று தான் கூற வேண்டும். தொகுப்பாளினியாக தன்னுடைய பணியில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கம். அதனடிப்படையில் தற்போது இவரின் சில போட்டோ கூடிய வீடியோக்கள் இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது